Paragraph Or Line Alignment in ms word
இந்த போஸ்டரில் MS
Word Line அல்லது paragraph-ஐ எவ்வாறு Align
செய்வது என்பதை பார்க்கப் போகிறோம். MS Word-இல் பல வகையான Alignment உள்ளன. உதாரணமாக Text Alignment, Table Alignment, Picture Alignment, Shape
Alignment, Paragraph Alignment, Margin Alignment என பல உள்ளன
அதில் இப்பொழுது நாம்
பார்க்க இருப்பது Paragraph or Line alignment, இது நான்கு வகைப்படும் அவை Left, Right,
Center, Justify. இவற்றை எப்படி
உபயோகிப்பது என்பதை பார்க்கலாம்.
எப்பொழுதும் நாம் MS Word document open
செய்தவுடன் Default-ஆக நாம் எழுதுவது
அனைத்தும் Left alignment ஆகும்.
1. Left Alignment (லெஃப்ட் அலைன்மெண்ட்)
Left alignment என்பது left side-ல் start ஆகும். left side வரும் line
அனைத்தும் ஒரே மாதிரியாக வரிசையாக இருக்கும், right
side அவ்வாறு சமமாக இருக்காது. கீழே படத்தில்
காண்பித்து உள்ளவாறு left alignment இருக்கும்.
நமக்கு
தேவையான Paragraph or Line-ஐ Select செய்து கொண்டு alignment-இல் left-ஐ கொடுக்கவும்
2. Right Alignment (ரைட் அலைன்மெண்ட்)
Left alignment-க்கு எதிர்மறையாக
இருக்கும். Right Side வருவது சமமாகவும்
நேராகவும் இருக்கும் ஆனால் left side-ல் அவ்வாறு
இருக்காது படத்தில் உள்ளது போல் இருக்கும்
நமக்கு தேவையான
Paragraph Or Line Select செய்து கொண்டு alignment-இல் Right-ஐ கொடுக்கவும்.
3. Centre Alignment (சென்டர் அலைன்மெண்ட்)
பெரும்பாலும் தலைப்புகள் Centre Alignment-ல் கொடுக்கப்படும், சென்டர்
அலைன்மெண்ட் என்பது Left மற்றும் right-க்கு இடையில் இருக்கும் அதாவது ஒரு page-ல் மத்தியில்
இருக்கும்.
நமக்கு
தேவையான Paragraph Or Line-ஐ Select செய்து கொண்டு alignment-இல் Center-ஐ கொடுக்கவும்.
4. Justify Alignment (ஜஸ்டிஃபி அலைன்மெண்ட்)
சரி இப்போது Left alignment வைத்தால் Right Side சரி இல்லை, Right alignment வைத்தால் Left
Side சரி இல்லை, Centre Alignment வைத்தால் இருபுறமும் சரி இல்லை எனவே இருபுறமும் சமமாக
இருக்க justify alignment உபயோகப்படுகிறது. இது இருபுறங்களிலும் சமமாக வைக்கின்றது கீழே படத்தில் காண்பித்துள்ளது போல்.
Web page-இல் இணைய பக்கங்களில் இந்த Justify அலைன்மெண்ட்
உபயோகப்படுகிறது
Conclusion
இந்த போஸ்ட்- இல் நாம் MS
Word alignment எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதை பார்த்தோம் இது உங்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும் என நம்புகிறோம்.






Comments
Post a Comment