Skip to main content

Featured Post

Indian Spices: Most Used 55 types of masala names with pictures

Indian spices names in English, This post help with learning Different Types of Spices names, it's most important for Indian foods, it's also called masalas. this is health benefits and improves food taste. List of Spices Turmeric Asafoetida Aniseed, Sweet cumin Bay leaf Black Pepper Cardamom Carom seeds Chickpeas Cinnamon 55 Types of Indian spices names Clove Coriander seeds, Indian parsley Dry Fenugreek Dry Ginger Jaggery Mustard seeds Black cumin seeds Poppy seeds Rice Red chili list of common spices Roasted gram Salt Saffron Semolina/sooji Sago Sesame seeds, Gingelly seeds Sugar Tamarind Wheat White pepper Star Anise Groundnut, Peanuts Bengal gram Black gram/Urad dal Green gram/Moong dal Yellow lentil/Tur dal Wheat flour/Atta Rice flour All-purpose flour/Maida Bengal gram/Besan flour Finger millet/Ragi flour Corn flour Millet pearl Puffed Rice Beaten Rice Oil Ghee Tea Coriander Powder Red Chilli Powder Garam Masala Powder/Mixed Spices Coffee Kapok Buds Cumin Seeds

Are You Beginner in Share Market Must Know What Is SHARE MARKET Basics in Tamil

ஷேர் மார்க்கெட் என்பது மிகப்பெரிய ஏல சந்தை, விற்பவர்களும் வாங்குபவர்களும் கூடும் இடம். இங்கு பல நிறுவனங்களின் பங்குகள் விற்கவும் வாங்கவும் ஏலம் நடைபெறும்.

Share Market in Tamil

ஒரு கம்பெனியின்  வளர்ச்சிக்கு அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு அதிக பணம்  தேவைப்படும் பொழுது அவர்கள் மக்களின் உதவியை நாடுவர்.  அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதற்கேற்றவாறு நிறுவனத்தின் பங்குகளை பிரித்து அவற்றை விற்பர். 

What is share:

>

நிறுவனங்கள் அவரவர் பணத் தேவைக்கு ஏற்றவாறு பங்குகளை விற்று பணம் பெறுவர். அதேபோல நிறுவனங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான அளவு ஷேர்களை விற்பனை செய்வது இல்லை.

ஒரு சிலர் அதிகமான Share தங்கள் வசம் வைத்துக் கொண்டு குறைவான பங்குகளை விற்பார்கள். ஒரு சில நிறுவனங்கள் பாதிக்கு பாதி அளவிற்கு பங்குகளை விற்பனை செய்வார்கள்.

அவரவர் தேவைக்கு ஏற்ப பங்குகளை விற்பனை செய்வார்கள். ஒரு பங்கினை வாங்கி விட்டால் மட்டும் நிறுவனத்திற்கு உரிமை கோர முடியாது ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்திருந்தால் மட்டுமே உரிமை கோரமுடியும்.

பங்கின் விலை உயர்ந்தால் பங்குதாரர்களுக்கு லாபம் கிடைக்கும், பங்கின் விலை குறைந்தால் நஷ்டம் ஏற்படும். ஒரு நிறுவனத்தின் ஒரு சிறிய பகுதியை பெறுவதே பங்காகும்.

உதாரணமாக இரண்டு நபர்கள் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பித்தார்கள் அதில் வரும் லாபம் இருவருக்கும் வழங்கப்படும் அதேபோல நஷ்டம் வந்தாலும் பிரித்துக் கொள்வர்.

இதில் நாம் எப்படி பணம் சம்பாதிப்பது என்றால் ஒரு நிறுவனத்தின் ஒரு சில பங்குகளை வாங்கி வைத்திருந்தால் அது உயரும் போது நமக்கு லாபம் கிடைக்கும் மேலும் சில நிறுவனங்கள் அதிக லாபம் கிடைத்தால் டிவிடெண்ட் என்ற பெயரில் நமக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை கொடுக்கும் மேலும் சில நிறுவனங்கள் போனஸ் என்ற பெயரில் ஒரு பங்கிற்கு ஒரு பங்கு இலவசமாகவே வழங்குவர் நாம் அப்படிப்பட்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

Primary and Secondary Market Difference:



Primary Market என்பது ஒரு நிறுவனம் அதன் பங்குகளை விற்பது or சந்தைப்படுத்துவது, அதனை பிரைமரி மார்க்கெட் என்கிறோம். இங்கு வாங்க மட்டுமே அனுமதி உண்டு.

பிரைமரி மார்க்கெட்டில் வரும் பங்குகள் மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்படும் பிறகு அந்நிறுவனத்தின் லாப நஷ்டத்துக்கு ஏற்ப விலை உயர்வும் தாழ்வும் அடையும்.

Secondary Market என்பது பங்குகளை வாங்கி விற்கும் இடம், இங்கு பிரைமரி மார்க்கெட்டில் வாங்கப்படும் பங்குகளை விற்கலாம் மேலும் புதிதாக பங்குகளை வாங்க வேண்டும் என்றாலும் செகண்டரி மார்க்கெட்டில் தான் வாங்க முடியும்.

Share Market Basics:

ஷேர் மார்க்கெட் முரண்பாடுகளை கண்காணிக்க இந்திய  அரசின் Securities and Exchange Board of India (SEBI) என்ற அமைப்பு ஒன்று உள்ளது.

இந்தியாவில் இந்த பங்கு சந்தையை நடத்துவதற்கு என்று மும்பை பங்குச்சந்தை(BSE -Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE- National Stock Exchange) உள்ளது.

NSE ல் 1700-க்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.BSE-ல் 5400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

 ஒரு கம்பெனி NSE அல்லது BSE-ல் LISTஆக வேண்டுமெனில் SEBI-ன் Approval  வாங்கினால்  தான் இணைக்க முடியும். BSE மற்றும் NSE அதற்கான தகுதியை வைத்துள்ளது. அதில் முழுமை பெற்றால் மட்டுமே IPO- க்கு போக முடியும். 

Sensex  என்பது BSE-ல்  சிறந்த 30 நிறுவனங்களின் குறியீடு ஆகும். Nifty என்பது சிறந்த NSE-ல் 50 நிறுவனங்களின் குறியீடு ஆகும்.

Comments

Popular posts from this blog

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் images, quotes, gif, videos download free 2021

 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் உயிர் நீத்து சுதந்திரத்தை போராடி மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். 1. Independence Day WhatsApp status: Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes Independence Day wishes in video  2. Independence Day Wallpaper உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்,  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, சாதி, மத, மொழி, இன பேதம் களைந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம். இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...! சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் போராடி உயிர் நீத்து சுதந்திரத்தை மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். சுதந்திரமான காற்றை சுவாசிப்போம். Independence Day wishes in video 

Learn Spoken English Through Tamil - Kitchen & Food Vocabulary

Kitchen Vocabulary  இந்த தொகுப்பில் நாம் சமையலறை சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம். தமிழ் வார்த்தைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதால் மிக எளிமையாக ஆங்கிலம் கற்க முடியும். English Name Tamil Name Cook சமையல் செய் Dishes உணவுகள் Ingredients பொருட்கள் Cookbooks சமையல் புத்தகங்கள் Add சேர்ப்பது Beat அடி Bake ரொட்டி போன்றவற்றை வேகவைத்துச் சுடுவது Boil கொதித்தல் Burn எரித்தல் Burning hot மிகவும் காரமான உணவு Batter தண்ணீர் கலந்த மாவு Blend கலத்தல் or அரைத்தல் Bland உப்பு காரம் இல்லாத Break உடை Broil ஓவன் நெருப்பில் வாட்டுதல் Boneless எலும்பு இல்லாத Bitter கசப்பு Carve செதுக்கு Chef சமையல்காரி or சமையல்காரன் ...

கத்தரிக்காய் HEALTH Benefits and BUYING Guide in Tamil

Eggplant(Brinjal) Health Benefits and Buying Guide இந்த தொகுப்பில் நாம் சிறந்த கத்திரிக்காய் எவ்வாறு வாங்குவது என்பது பற்றியும், கத்திரிக்காவினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கப் போகிறோம். கத்தரிக்காயின் நன்மைகள் 1. கொலஸ்ட்ராலை குறைக்கும் அதாவது கெட்ட கொழுப்பை குறைக்கும். 2. உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். 3. மூட்டு வலி தோல் நோய் வராமல் தடுக்கும். 4. கத்தரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகும், மழைக்காலங்களில் அதிகம் பயன்படுத்தலாம். 5. மலச்சிக்கல் நீங்கும். 6. பிளட் கேன்சர் வராமல் தடுக்கும். 7. அடிபட்டவர்கள் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் கத்தரிக்காய் சாப்பிடாமல் தவிர்க்கவும். ஏனெனில் அரிப்பு அதிகமாகும் புண் ஆற நாட்கள் அதிகமாகும். சிறந்த கத்தரிக்காய் வாங்குவதற்கான சில டிப்ஸ் Tip 1: கத்தரிக்காயின் தண்டு பச்சை நிறமாக இருக்கும் பழைய கத்திரிக்காய் என்றால் நிறம் மாற்றம் அடைந்து சாம்பல் நிறமாக இருக்கும் Tip 2: அதன் தோல் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும் Tip 3: கத்தரிக்காய் அதன் அளவுக்கு ஏற்ற அளவு பருமன் இருக்க வேண்டும் பருமன் குறைவாக இருந்தால் அது பழைய கத...